23 வயது நடிகருடன் ஜோடி சேரும் 47 வயது நடிகை! விவகாரமான படத்தில் விவகாரமான ஜோடி!

மும்பை: மீரா நாயர் இயக்க உள்ள புதிய படத்தில் தபுவுக்கு ஜோடியாக, இஷான் கட்டார் நடிக்க உள்ளார்.


A Suitable Boy, என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், விக்ரம் சேத் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.

இதில், இஷான் கட்டார் ஹீரோவாகவும்,  தன்யா மனிக்தலா, தபு ஆகியோர் ஹீரோயினாகவும் நடிக்க உள்ளார்.

இந்த படம் தனது சினிமா கேரியரில் முக்கிய பங்களிப்பை தருவதாக இருக்கும் என்று தபு குறிப்பிட்டுள்ளார். 

தபுவை விட வயதில் இளையவரான இஷான் கட்டார், இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனக்  கூறியுள்ளார்.

இந்த படத்தை வித்தியாசமாக, பிபிசி ஒன் சார்பாக, 6 பாகங்களாக எடுக்க உள்ளனர்.

இது, 1951 காலக்கட்டத்தில் இந்திய சமூகம் எப்படி இருந்தது என்பதன் பின்னணியாக வைத்து எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.