பொது இடத்தில் இளைஞனுடன் உதட்டு முத்தம்! வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்!

திராவக வீச்சில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக தீபிகா படுகோன் மற்றும் விக்ராந்த் நடிக்கும் ’சப்பாக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில் அந்த படத்தில் முத்தக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லியை சேர்ந்தவர் லட்சுமி அகர்வால். குட்டா என்ற இளைஞர் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும் படி இவரிடம் வற்புறுத்தினார். மறுப்புத் தெரிவித்து வந்தார் லட்சுமி. இதனால் ஆத்திரமடைந்த குட்டா, அவன் நண்பன் நதீம் சையத்துடன் சேர்ந்து லட்சுமி மீது 2005 ஆம் ஆண்டு திராவகம் வீசினார். அப்போது லட்சுமியின் வயது 15.

இதையடுத்து திராவகத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக குரல் கொடுத்துவரும் லட்சுமி சில டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். திராவகத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சான்வ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

இவரது வாழ்க்கை கதையை 'சப்பாக்' என்ற பெயரில் சினிமாவாகிறது. இதில், தீபிகா படுகோன் லட்சுமி அகர்வாலாக நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்கும் இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகாவே தயாரிக்கிறார்.  இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு தீபிகா படுகோன் மாறியுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்தப் படத்தில் முத்தக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே மற்றும் விக்ராந்த் இருவரும் ஒரு மாடியில் அமர்ந்து இருவரும் லிப் லாக் செய்வதுபோல் முத்தக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பல்வேறு கமெண்டுகளையும் இட்டு வருகின்றனர்.