திருமணமாகி ஐந்தே மாதத்தில் கள்ளக் காதல்..! மாயமான மனைவியை தேடிய புதுக் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் காதலன்தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது.


சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த தனபால் என்பவர் நாமக்கல்லில் ஜே.சி.பி. ஓட்டி வருகிறார். நாமக்கல் பேருந்துநிலையம் அருகே திருமங்கை என்பவர் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். திருமங்கை கடைக்கு வாடிக்கையாளராக சென்றுவந்த தனபாலுக்கும் திருமங்கைக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந் நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்னர் டிபன் கடையை ஏறக்கட்டிய திருமங்கை தன்னை காதலித்து வந்த தனபால் என்பவரையும் ஏறக்கட்டியுள்ளார். இதையடுத்து நாமக்கல் மாவட்டம் ராமபுதூர் பகுதியில் வேலைக்கு சேர்ந்துள்ளார் திருமங்கை. அங்கு புதிதாக அறிமுகம் ஆன ரமேஷ் என்ற தொழிலாளியை காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். இதை கேள்விப்பட்ட தனபால் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதையடுத்து திருமங்கையை ஒருமுறை சந்திக்க வேண்டும் என வரவழைத்த தனபால் அவரை மூலனூர் அமராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்து விட்டு சடலத்தை புதரில் வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதற்கிடையே கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மனைவி திருமங்கை காணவில்லை என கணவர் ரமேஷ் மூலனூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் அமராவதி ஆற்றங்கரையில் சடலம் இருப்பதாக தகவல் அறிந்து சென்ற போலீசார் திருமங்கை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.