கொட்டிய மழை! தாலி கட்டிய கையோடு புது மனைவியை மாட்டு வண்டியில் ஏற்றிய மாப்பிள்ளை! பொள்ளாச்சி சம்பவம்! ஏன் தெரியுமா?

பொதுவாக திருமணத்தில் தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மணமக்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவர். அந்த வகையில், திருமணம் முடித்து மணப்பெண் மற்றும் மணமகன் மறு வீட்டிற்கு செல்லவது வழக்கம் ஆனால் இவர்கள் மற்றவர்கள் போல் காரில் செல்லமால் மாட்டு வண்டில் சென்று அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்கள். இவர்கள் செய்த செயலால், பாராட்டுக்கள் குவிந்த வண்ணம உள்ளன.


 கோவையை சேர்ந்த அசோக் என்பவருக்கும், பொள்ளாச்சி பகுதியில் உள்ள காரச்சேரியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும், ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.  

திருமணம் முடிந்த பின், காரச்சேரியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு, புதுமணத் தம்பதிகள் அழைக்க கார் வந்தது . ஆனால் தம்பதிகள் காரை பயன்படுத்தாமல், மாட்டு வண்டியில் சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, கொட்டும் மழையில் குடை பிடித்த படி இருவரும் மழையில் நனைந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். காரில் செல்பவரை வியந்து பார்த்த காலம் பொயி தற்போது மாட்டு வண்டியில் செல்லும் தம்பதிகளை அனைவரும் வித்தியாசமாகவும், ஆச்சரியத்துடன் பார்த்த உள்ளார்கள்.

மேலும், இவர்கள் ஏன்? மாட்டு வண்டியில் செல்கிறார்கள் என்ற கேள்விக்கு, அழகாக இவர்கள் அழிந்து வரும் காங்கேயம் காளையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாட்டு வண்டியில் பயணம் செய்ததாக சற்று புன்னைகையுடன் புதுமணத் தம்பதிகள் கூறியுள்ளனர்.