பிரேக்கிற்கு பதில் ஆக்சலேட்டரை மிதித்த பெண்மணி! படுவேகமாக சென்ற கார்! பிறகு நேர்ந்த விபரீதம்!

நியூ ஜெர்ஸி: பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நபரால் கார் தண்ணீரில் விழுந்து மூழ்கியது.


நியூ ஜெர்ஸியில் உள்ள ஹாக்கென்சாக் ஆற்றங்கரையில், ஹாக்கென்சாக்  தீயணைப்புத் துறை அலுவலகம் உள்ளது. இங்கு கார் ஒன்றை ஓட்டிச் சென்ற டிரைவர், திடீரென பிரேக் பிடித்து காரை நிறுத்துவதற்குப் பதிலாக, ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். 

இதில், கார் நிலை தடுமாறி, தீயணைப்புத் துறை அலுவலகத்தை ஒட்டியுள்ள ஆற்றில் விழுந்து மூழ்கியது. காரில் இருந்த நபரை காப்பாற்றிய நிலையில், காரில் இருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். 

காரை 64 வயது முதியவர் ஒருவர் ஓட்டியதாகவும், காரில், அவரது மகள் மற்றும் ஒருவர் இருந்த நிலையில், முதியவர் திடீரென ஆக்சிலேட்டரை அழுத்தி இத்தகைய விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தீயணைப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.  இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சியை, ஹாக்கென்சாக் தீயணைப்புத் துறை அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.