பூங்கோதையை மிரட்டிய மாநில நிர்வாகி யார்..? கிடுகிடு தகவல்கள்.

பூங்கோதை ஆலடி அருணாவின் தற்கொலை முயற்சி விவகாரத்தில் தினம் ஒரு புதிய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் தற்கொலை முயற்சி செய்யவில்லை என்று பூங்கோதை அறிக்கை கொடுத்துவிட்டாலும், சர்ச்சைகள் அடங்குவதாக இல்லை.


பூங்கோதையின் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி அண்மையில் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தென்காசி மா.செ சிவபத்மநாபனுக்கும், பூங்கோதைக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார் பூங்கோதை.

அடுத்த சில நாட்களில் கடையம் ஒன்றிய பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வழக்கம்போல லேட்டாக சென்ற பூங்கோதை மேடையைப் பார்த்ததும் ஷாக்கானார். காரணம் அவரது சகோதரர் எழில்வாணன் மேடையில் அமர்ந்திருந்ததுதான். அதனால் பூங்கோதை மேடைக்கு செல்லாமல் கீழே ஒரு சேரில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தார்,

கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகி சீவலப்பேரி பாண்டியன் என்பவர், பூங்கோதை கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என காட்டமாக பேச, கூட்டத்தினரும் அதை ஆமோதிக்கும் வகையில் ‘கோ பேக் பூங்கோதை’ என ஆவேசமாகக் கூச்சலிட்டிருக்கின்றனர். நிலைமை மோசமாவதை அறிந்த பூங்கோதை தரையில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் அப்படியும் கூட்டத்தினர் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் கோபத்தில் கத்தியபடி இடத்தை காலி செய்திருக்கிறார்.

இந்த தகவலை சென்னைக்கு பூங்கோதை தெரிவிக்கும் முன்னரே மாவட்டச் செயலாளர் தெரிவித்துவிட்டார். அதனால் சென்னையில் இருந்து தலைமை நிர்வாகி பூங்கோதையைத் தொடர்புகொண்டு பயங்கர டோஸ் விட்டிருக்கிறார். மாவட்டச் செயலாளரை அட்ஜெஸ்ட் செய்து போகமுடியவில்லை என்றால் கட்சியிலே இருக்கமுடியாது என்று மிரட்டியிருக்கிறார் அந்த நிர்வாகி.

அதனாலே மனம் உடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. யார் அந்த தலைமை நிர்வாகி… ஏன் பூங்கோதையை ஸ்டாலின் பார்க்கவில்லை… கனிமொழி ஏன் சைலண்ட் ஆக இருக்கிறார்… என்று மர்ம நாவல் போல் போகிறது பூங்கோதை விவகாரம்.

உதயநிதிக்கு வேற வேலையே இல்லையா…? அப்பாவை போலவே இவருமா உளறணும்..? கொதிப்பில் திமுக சீனியர்கள்

திடீரென உதயநிதி களத்தில் இறங்கி தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் களேபரம் செய்துவருவது தி.மு.க. மூத்த நிர்வாகிகளை பெரும் எரிச்சலில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் ஸ்டாலினைப் போலவே இவரும் உளறிக்கொட்டுவது கட்சியினரை தலைகுனிய வைக்கிறது.

இன்று கைதாவதற்கு முன்பு மேடையில் பேசினார் உதயநிதி. அப்போது கொஞ்சம்கூட யோசிக்காமல், வரும் 2001ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று சொல்ல, கூடியிருந்த அத்தனை பேரும் அதிர்ந்தே போனார்கள். அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமப் பிறந்திருக்கே என்று தலையில் அடித்துக்கொண்டனர். 

ஏற்கெனவே உதயநிதிக்கு திடீரென பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறதே என்று கடுப்பில் இருக்கும் சீனியர் நிர்வாகிகள், அவர் இப்படி சொதப்புவதைக் கண்டு எரிச்சல் அடைகிறார்கள். நன்றாகப் பேசக்கூடிய எத்தனையோ சீனியர் தலைவர்கள் இருக்கும்போது, இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

சரி, காமெடி ஷோன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.