திருமணமான சில நிமிடங்களில் மயங்கிய மணப்பெண்! பரிசோதனை செய்து கர்ப்பமாக இருப்பதாக கூறிய டாக்டர்! அதிர்ச்சியில் உறைந்த திருமண மண்டபம்!

மேற்குவங்க மாநிலத்தில் திருமணம் முடித்த சில மணி நேரத்தில் புதுமணப்பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


மேற்கு வங்க மாநிலம் பிர்பும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நேற்று முன் தினம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடித்த சிறிது நேரத்தில் மற்ற சடங்குகள் அரங்கேற்றப்பட்டன. அப்போது கணவன் மனைவி இருவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி வந்து நின்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக புதுமணபபெண் மயக்கம் அடைந்துள்ளார்.இந்நிலையில் உடனே அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மணமகளை தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவரை பரிசோதித்த போது புதுமணப்பெண் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் பெரும் சண்டையை ஏற்படுத்திள்ளனர். இந்நிலையில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுவரையும் சமாதானப்படுத்தி விசாரணை நடத்தினர்.அப்போது பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது திருமணத்திற்கு முன்னர் வேறு ஒரு இளைஞனுடன் பழக்கம் இருந்ததால் கர்ப்பம் ஆனதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இதை அறிந்த மணமகள் வீட்டார் அந்த பெண்ணை சம்பவ இடத்திலேயே அடிக்கத்தொடங்கினர். உடனே காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த இளைஞரை திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் திருமண நாளின்போது புது மனைவி கர்ப்பமாக இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.