நடுநிலையாளர் மாலன் இதுக்காகத்தான் நிர்மலா சீதாராமனை சந்திச்சாராம்! நாக்கை புடிங்குற மாதிரி பொருளாதார கேள்வி கேட்டிருக்காராம்! எழுதத்தான் நேரம் இல்லையாம்!

இப்போது தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வுக்கு முட்டுக்கொடுக்க எத்தனையோ நபர்கள் இருந்தாலும், நடுநிலையாளர், பத்திரிகையாளர், பொருளாதார மேதை என்ற வாசகங்களோடு வந்து உட்கார்ந்து ஜால்ரா போடுவதற்கு ஒரு கூட்டம் உண்டு.


அவர்களில் மாலன், கோலாகல சீனிவாஸ், வெங்கடேஷ் ஆகியோர் நிச்சயம் இடம் பெறுவார்கள். இவர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஒரு படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், அந்தப் படத்துக்கு தானே முன்வந்து ஒரு விளக்கம் அளித்திருக்கிறார் மாலன். இதுதான் அது. 

நான், வெங்கடேஷ், கோலாகல ஸ்ரீநிவாஸ் ஆகிய மூவரும் அண்மையில் நிர்மலா சீதாரமனிடம் உரையாடிவதைப் போன்ற படம் போட்டு எங்கள் மீது பொழியப்படும் வசைகளும் எள்ளல்களும் அதிகம். ஏதோ எங்கள் மூவரை மாத்திரம் அவர் தனியாகச் சந்தித்தது போலச் சித்தரிக்கப்படுகிறது. 

உண்மையில் அந்த உரையாடலில் நாங்கள் மட்டுமல்ல, தினத்தந்தியின் சுகுமார், டெக்கான் க்ரானிகளின் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியாவின் ராஜேஷ், பத்திரிகைகளில் பத்திகள் எழுதும் ஜகந்நாதன், பிசினஸ் லைன் ஆசிரியர், போன்ற பலரும் பங்கேற்றார்கள். ஹிண்டு குழுமத்தைச் சேர்ந்த வேணு, முகுந்த் பத்மநாபன் ஆகியோர் முன் கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் பெற்று அவரைத் தனியே சந்தித்தனர்.

வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு எழக்கூடிய பிரச்சினைகள், டிஜிட்டல் இந்தியாவில் உள்ள முரண்பாடுகள் பற்றி அவரிடம் நான் கேள்விகள் வைத்தேன். விரைவில் எழுதுவேன் என்று கூறியிருக்கிறார். அதேபோன்று வெங்கடேஷும் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நானும் இந்த விளக்கத்தை நான் எழுதலாம் என்று நினைத்தேன் சார். ஆனால், கடுமையான பா.ஜ.க. வெறுப்பில் திளைக்கும் இணைய நண்பர்கள் யார் காதிலும் இது விழப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட வகையில் கட்டம் கட்டி, ஒதுக்கிவைத்து, விமர்சிப்பது என்பதுதான் இவர்களுக்குச் சௌகரியமாக இருக்கிறது.

ஆச்சரியம் என்னவென்றால், பத்திரிகைத் துறையிலும் எழுத்துத் துறையிலும் இருக்கும் மூத்தவர்களான ஃபிரண்ட்லைன் விஜயசங்கர், கவிஞர் சல்மா போன்றோர் கூட, என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளாமல், காழ்ப்புணர்வுகளைக் கொட்டியுள்ளனர். தமிழகத்தைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதற்கு இந்தப் புகைப்படம் உதவியது என்று கூறியிருக்கிறார்கள்.

நடுநிலையாளர்களாகவே இவர்கள் இருக்கட்டும், அது என்ன இவர்களுக்கு மட்டும் தனி பேட்டி..? இவர் குறிப்பிடும் பத்திரிகை எல்லாமே பா.ஜ.க. சார்பு பத்திரிகை என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமா?

என்னதான் நடக்கிறது மாலன்..? நீங்கள் நேரடியாகவே கட்சியில் சேர்ந்துவிடலாமே!