அடுத்த ரெய்டுக்கு காத்திருக்கும் தி.மு.க.வின் 5 புள்ளிகள் இவங்கதான்! உஷாரய்யா உஷார்!

துரைமுருகன் விவகாரம் வெளிவந்ததில் இருந்தே தி.மு.க. கொதித்துப்போய் இருக்கிறது. தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் அருகிலுள்ள குடோன் உள்ளிட்ட வேலூர் தொகுதியின் முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டும், அதில் கைப்பற்றப்பட்ட பணமும் மக்களை மிரட்டியிருக்கிறது.


இனியும் இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்ற படியில் ஏறி தி.மு.க. புலம்பிக்கொண்டு இருக்கிறது. மேலும் தேர்தல் தலைமை ஆணையரிடமும் புகார் சொல்லி வருகிறார்கள்.

ஆனால், வருமான வரித்துறையினர் அடுத்தடுத்து நடக்கப்போகும் ரெய்டுகள் குறித்து ஏற்கெனவே பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

அந்த முக்கியத் தலைகள் யார் தெரியுமா? முதல் நபராக இருப்பவர் 2ஜி புகழ் ஆ.ராசா. நீலகிரி தொகுதியில் இவரது வெற்றிவாய்ப்பு நன்றாக இருப்பதால் அதர்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள்.

அடுத்தபடியாக தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு மற்றும் பழனிமாணிக்கம் ஆகியோர் ரெய்டில் சிக்க இருக்கிறார்கள்.

இந்தத் தகவல் அறிந்து பணத்தைப் பதுக்கும் பணியில் இருக்கிறார்களாம், வேட்பாளர்கள்.