தல படம் வெற்றியா இல்லையா..? தயாரிப்பாளர், இயக்குனர் ஏடாகூட பேட்டியால் சலசலப்பு!

தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வெளியனாலும் ஆரோக்யமான விவாகத்தை ஏற்படுத்தும் படங்கள் ஒருசிலவைதான் என்றே கூறலாம். அதற்கான முயற்சியை புதுமுக இயக்குநர்கள் எடுத்து வருகிறார் என்று கூறினாலும் ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.


அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் ஒரு நேர்மறையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. அஜித்திற்கு முத்திரை பதிக்கும் படமாக நேர்கொண்ட பார்வை இருந்தது. 

பாலியல் உறவு தொடர்பாக நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் முற்றிலும் புதிதானவை. பெண்கள் சுதந்திரம் குறித்தும் அவர்கள் சுதந்திரத்தை ஆண்கள் பார்க்கும் புரிந்து கொள்ளும் விதத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும் நேரிடையாகவே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேர் கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று நல்ல வசூலை கொடுத்ததாக விநியோகஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத் ரசிகர்களை தாண்டி பொதுமக்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அதனால்தான் கமர்ஷியலாக இல்லாமலும் நன்றாக ஓடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல சினிமாப் பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தபோது நேர்கொண்ட பார்வை தாங்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு ஓடுமா என நினைத்தோம். ஆனால், படம் செம்ம வசூல் செய்தது’ என கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க திரைப்படம் குறித்து பிரபல இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்தபோது தமிழ் சினிமாவுக்கு பெரிய சிக்கலாக இருப்பது பைரஸி என்ற ஒரு காரணமும், கட்டணத்திற்கு பயந்து மக்கள் தியேட்டர் பக்கம் வர யோசிப்பதும் தயாரிப்பாளர்களின் நஷ்டத்திற்கு ஒரு காரணம் என பேசினார்.

மக்கள் தியேட்டர் வரவேண்டும் என்றால் யார் நடித்திருக்கிறார்கள், என்ன இருக்கிறது என பார்த்து தான் வருகிறார்கள். ஆனால் தற்போது ஹீரோக்கள் படங்களே சில சமயங்களில் ஆள் வருவதில்லை. நேர்கொண்ட பார்வை படம் 4 நாள் மட்டுமே கூட்டம் இருந்ததது என திருப்பூர் சுப்ரமணயத்திற்கு நேர்மாறாக பேசியுள்ளார். சின்னகவுண்டர், எஜமான் போன்ற ஆர்.வி.உதயகுமார் படங்களை இயக்கியவர் ஆர்.வி. உதயகுமார்

இந்தியில் அமிதாப் நடித்த பிங்க் படம்தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல். பாலிவுட் கலாச்சாரத்தில் உள்ள கதையை தமிழில் எடுப்பது ரிஸ்க் என கூறப்பட்ட நிலையில் அதையும் மீறி நம்ம தல அஜீத் படம் வெற்றி பெற்றுள்ளது.