நேர் கொண்ட பார்வை பிசினஸ் செம டல்! ஆகஸ்ட் 1 வெளியாவதில் சிக்கலோ சிக்கல்!

நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரிப்பாளர் கூறும் விலைக்கு வாங்க யாரும் முன்வரவில்லை.


இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்று அஜித்தை வைத்து எடுத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் தமிழில் அஜித் நடித்துள்ளார். அதாவது வயதான வழக்கறிஞ’ர் வேடத்தில் அஜித் தோன்றுகிறார். பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் மொத்தமே 40 முதல் 50 நிமிடங்கள் தான் வருவார். 

அதாவது கெஸ்ட் ரோல் போல ஆனால் பவர் புல் ரோலில் அமிதாப் பச்சன் நடித்திருப்பார். ஆனால் தமிழில் அஜித் கேரக்டரை ஹீரோவாக்கி, ஹீரோயினாக வித்யாபாலனையும் நடிக்க வைத்து சண்டை காட்சிகளுடன் சில மசாலாக்களையும் தூவியுள்ளனர். ஆனாலும் கூட படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் அஜித் சிறிது நேரம் மட்டுமே வருவதாக பீல் செய்துள்ளனர். எனவே படத்தின் உரிமையை தயாரிப்பாளர் கூறும் தொகைக்கு வாங்க அவர்கள் மறுத்து வருகின்றனர். தமிழில் நேர் கொண்ட பார்வை படத்தை வாங்க 3 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.

எக்ஸ் ஜென் ஸ்’டூடியோஸ், யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ், ஸ்க்ரீன் ஸீன் ஆகிய நிறுவனங்கள் பேசி வருகின்றன. விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமை 47 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இதன் மூலமாக சுமார் 30 கோடி ரூபாய் வரை லாபம் பார்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை மனதில் வைத்து நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய போனி கபூர் பேரம் பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் விஸ்வாசம் படத்திற்கு கொடுத்த 47 கோடி ரூபாயை கொடுக்க கூட ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் முன்வரவில்லை என்கிறார்கள். 

அஜித்தின் கேரக்டர் படத்தில் அதிகம் இல்லை என்பதால் 35 கோடி ருபாய்க்கு ஆரம்பித்து 40 கோடி ரூபாய்க்கு முடிக்க ஸ்க்ரீன் ஸீன் பேசி வருவதாக கூறுகிறார்கள். அவர்களை தவிர வேறு யாரும் நேர் கொண்ட பார்வையை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் படத்தின் வெளிநாடு, வெளிமாநில உரிமையை விற்பதில் சிக்கல் எழந்துள்ளது. தமிழக உரிமையை விற்காமல் வெளிமாநில உரிமையை விற்றால் சிக்கல் என்பதால் போனி கபூர் தற்போது தலையை சொரிந்து வருகிறாராம். 

இதனால் ஆகஸ்ட் 1ந் தேதி நேர் கொண்ட பார்வை ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. விலையை குறைத்தால் வாங்கிக் கொள்ள பலரும் தயாராக உள்ள நிலையில் அதனை போனி கபூர் செய்வாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.