லாக்கப் டெத்! தகாத உறவு! கற்பழிப்பு! லீலாபாய் மரணம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்!

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கிறிஸ்டோபர் என்பவர் மீது பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் வள்ளியூர் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவான கிறிஸ்டோபரை போலிசார் தேடி வந்த நிலையில் கப்பிக்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்ட லீலாபாய் என்பவரை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

பின்னர் தனியார் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அழைத்து செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக லீலாபாய் உயிரிழந்தார். லீலாபாய் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பிரச்சனை கொஞ்சம் பெரிதாகி உள்ளது.

லீலாபாய் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தவேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தலைமறைவான கிறிஸ்டோபரை பிடிக்காமல் லீலாபாயை ஏன் விசாரிக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.

உயிரிழந்த லீலாபாய்க்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் பாலியல் புகாரில் தலைமறைவாக உள்ள கிறிஸ்டோபருக்கும் லீலாபாய்க்கும் என்ன உறவு எதற்காக அடிக்கடி பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.