நெல்லை வீரத்தம்பதி வழக்கு! 50 நாட்களுக்கு பின் சிக்கிய 3 பேர்! பரபரப்பு பின்னணி!

நெல்லை மாவட்டத்தில் வீரதம்பதி வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் 50 நாட்களுக்கு பிறகு குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.


கடையம் பகுதியில் வசித்து வரும் வீர தம்பதி ஷண்முகவேல், செந்தாமரை வீட்டில் ஆகஸ்ட் மாதம் முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் சென்றனர். அப்போது ஷண்முகத்தை கட்டிப் போட்டுவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதை பார்த்த மனைவி அவர்கள் மீது சில பொருட்களை வீசித் தாக்கினார். 

ஷண்முகவேல், கொள்ளையர்கள் பிடியில் இருந்து விடுபட்டு அரிவாளால் மிரட்டியதில் கொள்ளையர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும், அவர்கள் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த முதிய தம்பதியின் வீரத்தை பாராட்டும் வகையில், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வீரதீர துணிவிற்கான விருது வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த கொள்ளை முயற்சி வழக்கு விசாரணையில் பாலமுருகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். 

கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் குறித்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வயோதிக தம்பதி என்றாலும் சமயோசிதமாக செயல்பட்டு எதிர் தாக்குதல் நடத்தியதில் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு இல்லாமல் தப்பியதை பலர் பாராட்டினர்.