கேரளாவில் தன்னை பார்த்து குறைத்த நாயை கத்தியால் குத்தியதுடன் நாயின் உரிமையாளர் வீட்டையும் சூறையாடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பக்கத்து வீட்டுக்காரனால் வளர்ப்பு நாய்க்கு ஏற்பட்ட கொடூரம்..! கட்டையால் அடித்து வெறியாட்டம்..! அதிர வைக்கும் காரணம்!

கேரள மாநிலம் திருவல்லாவைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் – சாலி சந்தோஷ் தம்பதி சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் தங்கள் வீட்டுக்கு வெளியே பெரும் சத்தம் கேட்டதை அடுத்து வெளியே ஒடிவந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களது கார் நிறுத்தும் இடத்தின் அருகே கட்டப்பட்டிருந்த அவர்களது செல்ல நாயை பக்கத்து வீட்டுக் காரரான அஜீத் என்பவர் கம்பால் சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருந்தார். அதனை சந்தோஷ் தடுக்க முயன்றபோது அஜித் சந்தோஷையும் தாக்கினார். அஜித்தும் அவருடன் இருந்த அவரது சகோதரரும் அங்கிருந்த பொருட்களை கண்டபடி தூக்கி வீசி சூறையாடியதுடன், காரையும் அடித்து உடைத்தனர்.
அதன் பின்னர்தான் உச்சகட்ட் கொடூரம் அஜீத் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து நாயைக் குத்தியதில் அந்த நாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து விழுந்தது இதனைத்தொடர்ந்து அஜித்தும் அவரது சகோதரரும் தப்பியோடினார்.
காரணம் இது தான். அவர்கள் வளர்த்து வந்த நாய் அந்த வழியாக செல்பவர்களை பார்த்து பயங்கரமாக குரைப்பது வழக்கம். ஆனால் கேட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் அந்த நாய் இதுவரை யாரையும் தாக்கியதோ தொந்தரவு கொடுத்ததோ கிடையாது என்கிறார் சந்தோஷ்.
இந்நிலையில் அஜீத் ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போதும் நாய் குரைத்ததால் ஆத்திரம் எல்லை மீறிய நிலையில் இருந்த அஜீத் மது அருந்தியிருந்ததும் சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மிருகவதை, பிறர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், சூறையாடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜீத்தையும் அவரது சகோதரரையும் தேடிவருகின்றனர்.