உதயநிதி தொடங்கியதை நேரு முடிக்கிறார்! ஸ்டாலினுக்கு அழிவு ஆரம்பம்!

எவ்வளவு நாள்தான் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது, வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து நிற்க வேண்டும் என திருச்சியில் திடீரென பொங்கியிருக்கிறார் கே.என். நேரு.


இது அப்படியே உதயநிதியின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற திமுக கூட்டத்தில், நாங்குநேரி தொகுதியை எங்களிடம் கொடுத்துவிடுங்கள், திமுக ஈசியாக ஜெயித்துவிடுவோம் என்றதுடன் நில்லாமல்,  வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தலைவர் கூட்டணில் கட்சிகளுக்கு குறைவான சீட்டையே கொடுக்க வேண்டும் என்று தொடங்கி வைத்தார். 

கூட்டணி என்பதும், சீட்டு விவகாரம் குறித்தும் மூடிய அறைகளுக்குள் பேசவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதனை உதயநிதி மீறியதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் ஸ்டாலின். அதனால் அப்போதே ஸ்டாலின் சொல்லித்தான் உதயநிதி பேசினார் என்று சொல்லப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. தயவால்தான் அத்தனை கூட்டணிக் கட்சிகளும் ஜெயித்திருக்கின்றன என்ற மமதை ஸ்டாலினுக்கு வந்துவிட்டது என்பதுதான் உண்மை.

இந்த தேர்தலை ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வெற்றி போலவே தோன்றும். ஆனால் இந்த வெற்றியை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என இரண்டாக பிரித்துப் பார்த்தால் தி.மு.க.வுக்குத் தோல்விதான். அதனால் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி போன்றவை திரண்டு வரும் நேரத்தில் இப்படி ஏதேனும் வம்பு வழக்கு செய்து காங்கிரசை கழட்டிவிட்டால், அது ஸ்டாலினுக்குத்தான் கேடாக முடியும். ஸ்டாலின் கடைசி வரை ஆட்சிக் கட்டிலில் உட்கார முடியாது என்று எதிர்க் கட்சிகள் சொல்வது சரிதான் போலிருக்கிறது.