நீட் தேர்வில் பாஸ் செய்த 93% சதவிகிதம் பேர் மருத்துவம் படிக்க முடியாது! ஏன் தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?? நீட் தேர்வை கிளியர் செய்த அதாவது பாஸ் செய்த, 93% சதவிகிதம் பேர் மருத்துவம் (MBBS) படிக்க முடியாது என்று..


நீட் தேர்வில் தேர்ச்சி அடைவது என்பது நாம் +2 வகுப்பில் 35% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது போன்றது. முன்பு நுழைவுத்தேர்வு இல்லாதபோது எப்படி 35 விழுக்காடு மதிப்பெண் பெற்றால் மருத்துவக்கல்லூரி இடம் கிடைக்காதோ,  அதுபோல,  நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து விடாது.   

நீட் தகுதி தேர்வில் வேற்றி பெற்ற அனைவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காது.. உதாரணமாக, தமிழ் நாட்டில் 2018 ஆம் ஆண்டு 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. ஆனால், இங்கிருக்கும் MBBS படிப்பு இடங்களோ வெறும் 5660 மட்டுமே.. அதாவது, தகுதி தேர்வில் பாஸ் செய்தவர்களில், மெரிட் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 5660 பேருக்கு (12.5% சதவீதம்) மட்டுமே மெடிகல் படிக்க இடம் கிடைக்கும்... மீதமுள்ள 40 ஆயிரம் பேரில் இருந்து, பணம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் அந்த ஐநூறு மேனேஜ்மென்ட் கோட்டா சீட்டுகளில் பணம் கொடுத்து சேரலாம்..

முன்பு 200க்கு 198 , 197,  196 என்று எப்படி கட் ஆப் மதிப்பெண் இருந்ததோ அது போல நீட் தேர்வில் 720க்கு  600 க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.  நீட் தேர்வில் 150 மதிப்பெண் எடுத்தும் ஒருவன் மருத்துவக் கல்லூரியில் சேர்கிறான் என்றால் அவன் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு கோடி ரூபாய் பணம் கட்டி சேர்த்துவிட வசதி உள்ள பெற்றோர்களுக்கு பிறந்தவராகத்தான் இருக்க முடியும்.

நீட் தேர்வு என்பது கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிப்பதற்கான பல்லாயிரம் கோடி வணிக உத்தி ஆகும். நீட் தேர்வு கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய நடுத்தர வர்க்க  மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் இருந்து தடுத்துவிடும். ப்ளஸ் டூ முடித்த பின்பு ஆண்டுக்கு  3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தனியார் நீட் கோச்சிங் சென்டர் மூலம் பயிற்சி எடுப்பவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு .

அகில இந்திய அளவில் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் பாதிப்பேர் நீட் கோச்சிங் படித்திருந்தாலும், நீட் கோச்சிங் வணிகத்தில் புரண்ட தொகை, சுமார் 12,000 கோடி.