நீட் தேர்வு உயர் ஜாதியினருக்கு மட்டுமே! அம்பலமாகும் உண்மை!

கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 9% தமிழர்கள் கூடுதலாக நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.


அதனால், இனிமேல் தமிழர்களுக்குப் பிரச்னையே இல்லை என்பது போல் பல பதிவுகள் எழுதப்பட்டு வருகிறது. இப்போது உண்மை என்னவென்பதைப் பார்க்கலாம். இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் எஸ்.சி./எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் மொத்தமே 20,009 பேர். ஓ.பி.சி.யில் 63,749 பேர். ஆக, மொத்தம் 83,758 பேர்தான் பிறபடுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வு ஆகியிருக்கிறார்கள்.

ஆனால், முன்னேறிய வகுப்பினர் கிட்டத்தட்ட 7 லட்சத்து 4 ஆயிரம் பேர். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று தெரிகிறதா? தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு இருந்தும், அதில் சேர்வதற்குப் போதிய மாணவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், மீதமுள்ள அனைத்தும் முன்னேறிய மாணவர்களுக்கே போய்ச் சேர்ந்துவிடும்.

இப்போது நீட் தேர்வு குறித்து எதிர்ப்பு இருப்பதால், கொஞ்சம் எளிதாக கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் நீட் தேர்வு இன்னமும் கடுமையாக்கப்படும். அப்போது தேர்ந்தெடுக்கப்படும் மற்ற மாணவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறையும். ஆக, நீட் தேர்வு என்பது முன்னேறிய வகுப்பினருக்கானது மட்டும்தான் என்பது மீண்டும் மீண்டும் உறுதி படுத்தப்பட்டுள்ளது.