நீட் தேர்வு ரத்து! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி உண்மையா? அம்பலமான ராகுலின் மோசடி!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களில் உண்மை நிலை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.


நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சி மற்றும் தொடர்ச்சியாக செய்தியை ஒளிபரப்பியது.

அதாவது தேர்தல் அறிக்கை வெளியான அடுத்த நிமிடமே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. நீட் தேர்வு என்கிறார் ஒரு யோசனையை கொண்டு வந்து அதனை செயல் திட்டம் ஆக்கியதே காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியின் நீட் தேர்வு திட்டத்தை செயல்படுத்தியது தான் மோடி அரசு. நீட் என்கிற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார் காங்கிரஸ் எப்படி அந்தத் திட்டத்தை ரத்து செய்யும் என்று பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்த்த போதுதான் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்கிற உண்மை தெரியவந்தது. அதாவது நீட் தேர்வுக்கு ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த மாநிலங்கள் விரும்பினால் தனியாக ஒரு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை வைத்துக் கொள்ளலாம் என்று தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எப்படி என்றால் இப்போது இருக்கும் நீட் தேர்வு வேண்டாம் ஆனால் புதிதாக ஒரு நுழைவு தேர்வு வைத்து எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு ரத்து என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளதாக அபாண்டமான ஒரு தகவலை குறிப்பிட்ட சில ஊடகங்களும் குறிப்பிட்ட சில மோடி எதிர்ப்பாளர்களும் பரப்பி வருகின்றனர்.

இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் கூட நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதாக சிறிதும் நேர்மையற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆகவே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற எல்லாம் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது தான் உண்மை.