குழந்தையை வெளியே எடுத்துவிட்டு வயிற்றில் ஊசியை வைத்து தைத்த கொடூரம்! கதறிய கர்ப்பிணி! ராம்நாடு பரபரப்பு!

பிரசவத்திற்கு வந்த இளம்பெண்ணின் வயிற்றில் உடைந்த கத்தியை வைத்து தைத்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி பகுதியில் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரம்யா தம்பதி வசித்து வருகின்றனர். ரம்யா கர்ப்பமாக இருந்த காலத்தில் உச்சிப்புள்ளி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். 

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்டது. பின்னர் வீடு திரும்பிய ரம்யாவிற்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமான ரத்தப்போக்கு இருந்ததை அடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்தார். 

எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்துபார்த்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பிரசவத்தின்போது, ரம்யாவின் வயிற்றில் உடைந்த கத்தியை வைத்து அறுவைசிகிச்சை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ரம்யா எடுத்து செல்லப்பட்டு, அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனை அறிந்த ரம்யாவின் உறவினர்கள், உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், சில மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.