சிதம்பரம் விசாரணையை லைவ் டெலிகாஸ்ட் செய்யணுமாம்..! இந்திராணி விவகாரத்தில் கே.எஸ்.அழகிரியின் ஆசை!

சிதம்பரம் சி.பி.ஐ. கஸ்டடியில் படாதபட்டு வருகிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன.


தினமும் ஆறு மணி நேரத்துக்கு மேல் அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். நிம்மதியாகத் தூங்கவும், சாப்பிடவும் விடாமல் கேள்வி கேட்டாலும், அவர் சளைக்காமல் எஸ், நோ, ஞாபகம் இல்லை என்ற பதிலை மட்டுமே தருகிறாராம்.

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மீடியாவில் பேசியபோது, ‘சிதம்பரத்துக்கு நடக்கும் விசாரணையை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இவரது கோரிக்கையைக் கேட்டு காங்கிரஸ் கட்சியினரே அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார்கள். ஏனென்றால், அடுத்து ஐ.என்.எக்ஸ். வழக்கு தொடர்பாக இந்திராணியை நேரில் அழைத்துவந்து விசாரணை நடத்தப்போவதாக செய்திகள் வெளியாகின்றன.

அப்படி இந்திராணியுடன் சிதம்பரம் பேசிக்கொள்வதைத்தான் ஒளிபரப்பு செய்ய ஆசைப்படுகிறாரா என்று கேள்வி கேட்கிறார்கள். ஏனென்றால், ‘நான் சிதம்பரத்துக்கு பணத்தையும் என் உடலையும் கொடுத்தேன்’ என்று சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்.

இந்த நிலையில் அவர்கள் பேசிக்கொள்வதை ஒளிபரப்பினால் என்னாத்துக்காவது என்று அதிர்கின்றனர். எப்படி என்றாலும் இத்தனை ஊழல் செய்தவரா சிதம்பரம் என்றுதான் கேள்வி வருமே தவிர, அனுதாபம் எப்படி வரும் என்றுகேட்கிறார்கள். 

சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வரவேகூடாது என்று அழகிரி ஆசைப்படுகிறாரோ என்னவோ..?