நேர் கொண்ட பார்வை! அஜித்துக்காக திணிக்கப்பட்ட மாற்றம் நல்லதா?

இந்தியில் வெளிவந்து பரவலான கவனிப்பும் நல்ல வெற்றியும் பெற்ற படம் பிங்க்.


அந்தப் படத்தில் அஜித் நடிக்கப்போகிறார் என்றபோதே பலருக்கும் புருவம் உயர்ந்தது. ஏனென்றால், அஜித் நடிப்பதற்கு ஏற்ற பெரிய கேரக்டர் அல்ல, மொத்தமே படத்தில் அரை மணி நேரம் கூட வாய்ப்பு கிடையாது.

ஆனாலும், ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் நடிக்க முன்வந்ததை அனைவரும் பாராட்டினார்கள். ஆனால், இன்று படம் வெளியான நிலையில், அஜித்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்தும் படத்தின் தன்மையைக் குறைப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், அஜித் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக ஒரு பெரிய சண்டைக்காட்சி இணைக்கப்பட்டுள்ளது. ஒரிஜினலில் அமிதாப்பின் மனைவி நோயின் பாதிப்பால் இறந்துவிடுவார், அதுவும் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. 

எல்லாம் சரிதான். அஜித் நடிக்கிறார் என்பதற்காக இத்தனை பேரை அடிக்கும் அளவுக்கு ஒரு சண்டைக் காட்சியைத் திணிக்க வேண்டுமா என்பதுதான் ரசிகர்களின் கேள்வி. ஏனென்றால், படத்தின் ஒரிஜினாலிட்டியை அந்த சண்டைக்காட்சி சீரழித்துவிட்டது என்பதுதான் உண்மை.

அதுசரி, துட்டு சேரணும்னா இப்படித்தான் செய்வாங்க சினிமாகாரங்க.