திருவிழா கச்சேரியில் வன்னியர்களை புகழ்ந்து பாடல்! தலித்துகள் கல் வீச்சு! வெடித்தது கலவரம்!

விழுப்புரம் அருகே திருவிழா கச்சேரி பாடலினால் துவங்கிய மோதல் , சாலை மறியல் வரை நீண்டதால் போலீசார் லேசான தடியடி நடத்து கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கமலகண்ணி அம்மன் ஆலய  தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாட்டு கச்சேரி நடைபெற்றதில் வன்னியர் தொடர்பான பாடல் பாடப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்த தலித் பிரிவினர், கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனையடுத்து நிலையை கட்டுக்குள் வைக்க அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்

மீண்டுமாக பாட்டு கச்சேரி தொடர்ந்த நிலையில்,  ஆத்திரமடைந்த வன்னிய இளைஞர்கள் சிலர் தலித் பிரிவினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கல் வீசியும் , மோட்டார் சைக்கிள், கார், வீடு, குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை  அடித்தும் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தலித் பிரிவினர் செஞ்சி விழுப்புரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றதால் லேசான தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்.இதானல் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..