ஆபாச படமாகும் நயன்தாராவின் உங்கள போடனும் சார்!

நயன்தாராவின் பிரபலமான வசனமான உங்கள போடனும் சார் திரைப்படமாக உருவாக உள்ளது.


நானும் ரவுடி தான் படம் பார்த்த ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த வசனம் ஒன்று இருக்கிறது. அந்த வசனம் தான் உங்கள போடனும் சார் என்பதாகும். படத்தில் நயன்தாராவின் தந்தையை பார்த்திபன் கொலை செய்திருப்பார். இதனால் பார்த்திபனை பழி வாங்க நயன்தாரா துடித்துக் கொண்டிருப்பார்.

   படத்தின் கிளைமேக்சில் நயன்தாராவிடம் பார்த்திபன் தனியாக சிக்குவார். ஆனால் பார்த்திபனுக்கு தான் கொலை செய்தவனின் மகள் தான் நயன்தாரா என்பத தெரியாது. இதனால் நயன்தாராவிடம் உனக்கு என்னமா வேணும்? என்று கேட்பார் பார்த்திபன்.

   இதற்கு உங்களை போடனும் சார் என்று நயன்தாரா பதில் அளிப்பார். அதாவது உங்களை கொலை செய்ய வேண்டும் என்கிற அர்த்தத்தில் நயன்தாரா உங்களை போடனும் சார் என்கிற வசனத்தை பேசுவார். ஆனால் பார்த்திபனோ வேறு மாதிரி புரிந்து கொள்வார்.

   அதாவது தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள நயன்தாரா விரும்புவதாக பார்த்திபன் கருதிக் கொண்டு பேசுவார். இப்படியாக இரட்டை அர்த்தம் அந்த படத்தின் மூலம் பிரபலம் ஆனது. தற்போது அந்த இரட்டை அர்த்த வசனத்திலேயே ஒரு படம் உருவாகி வருகிறது.

   ஆம் ஒரு படத்திற்கு பெயரே உங்கள போடனும் சார் என்று வைத்துள்ளார்கள். இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அடல்ட் காமெடி என்கிற ஜெனரில் உங்கள போடனும் சார் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.

   சஞ்சுளா, ஜோனிடா, அனு நாயர், பிராச்சிதா மற்றும வைசாலி ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளனர். இரட்டை அர்த்த வசனங்கள் தெரிக்க தெரிக்க அடல்ட் காமெடியாக உங்கள போடனும் சார் உருவாக உள்ளது. அதே சமயம் படத்திற்கு நயன்தாராவின் வசனத்தை வைத்து பிரபலப்படுத்த முயற்சி நடைபெறகிறது.