குருவி படத்தில் கிடைத்த அவமானம்! காத்திருந்து விஜயை பழி தீர்த்த நயன்தாரா!

குருவி படத்தில் நடிகர் விஜய் – இயக்குனர் தரணி சேர்ந்து செய்த செயலால் ஏற்பட்ட அவமானத்திற்கு நடிகை நயன்தாரா தற்போது பழி தீர்த்துள்ளார்.


நடிகர் விஜய் – த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கிய குருவி படம் ரசிகர்களுக்கு நினைவில் இருக்கும். படம் மிகப்பெரிய தோல்வி. ஆனால் இங்கு அது விஷயம் இல்லை.

அந்த படத்தில் முதலில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாரா. இதற்கான அட்வான்ஸ் தொகை கூட அவரிடம் தயாரிப்பாளர் உதயநிதியால் அப்போது கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் திடீரென படத்தில் இருந்து நயன்தாராவை நீக்கினார்கள்.

பிறகு த்ரிஷா அந்த படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதன் பின்னணியில் விஜய் – த்ரிஷா இடையிலான நட்பு இருந்ததாக அப்போதே பேசப்பட்டது. 2008ம் ஆண்டு குருவி திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் நயன்தாரா இப்போது இருந்த அளவிற்கு முன்னணி நாயகி கிடையாது. 

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா போன்றோருடன் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சந்திரமுகி மூலம் பிரபலம் அடைந்திருந்தார். அதே சமயம் அப்போது த்ரிஷா மிகவும் முன்னணி நாயகி, தொடர் வெற்றிகளால் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்.

ஏற்கனவே விஜய் – தரணி கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கில்லி படத்தில் அவர் தான் நாயகி. எனவே இந்த கூட்டணியில் உருவாகும் குருவியில் எப்படியும் இணைய வேண்டும் என்று த்ரிஷா முயற்சி மேற்கொண்டார். பிறகு அவர் விஜயை நேரில் சந்தித்து பேசியதை தொடர்ந்து நயன்தாரா நீக்கப்பட்டு குருவியில் த்ரிஷா நாயகி ஆனார்.

இதனால் அப்போது நயன்தாராவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆனால் தயாரிப்பாளர் உதயநிதி நயன்தாராவிடம் இருந்து அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்கவில்லை. மாறாக அவரது அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

இதனால் தான் தற்போது வரை உதயநிதி அழைத்தால் உடனடியாக சென்று அவர் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ஆனால் விஜயுடன் வில்லு படத்திற்கு பிறகு பிகிலில் தான் ஜோடி சேர்ந்தார். அதுவும் கூட இயக்குனர் அட்லிக்காக என்கிறார்கள்.

மேலும் அண்மையில் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டில் எவ்வளவோ அழைத்தும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் நயன்தாரா. இதற்கு காரணம் விழாவில் பங்கேற்றால் விஜயை புகழ வேண்டியிருக்கும் என்பதால் தான் என்கிறார்கள்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாரா தான் நாயகியாக நடிக்கும் படத்தில் மட்டுமே புரமோசன் விழாக்களில் பங்கேற்கிறார்கள். முன்னணி ஹீரோக்கள் யாருக்காகவும் புரமோசனுக்கு வருவதில்லை. ஆனாலும் கூட விஜய் போன்ற மிகப்பெரிய மாஸ் ஹீரோவின் பட விழாவில் நாயகி கலந்து கொள்ளாதது சாதாரண விஷயம் இல்லை.

இது குறித்து விசாரித்த போது குருவி படத்தில் எப்படி தன்னை சேர்த்து விஜய் நீக்கினாரோ அதே போல் அவர் படத்தில் நடித்தாலும் புரமோசன் எதிலும்பங்கேற்மல் நயன்தாரா பழிவாங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.