நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் திரும்பவும் ஆட்சியை பிடிக்கிறார் நவீன் பட்நாயக். ஒடிசா எப்போதும் அவருடைய கோட்டை என்பதை மேலும் முறை நிரூபித்து காட்டிவிட்டார் என்றே கூறலாம்.
ஒடிசா ! பட்நாயக் கோட்டையை அசைத்து பார்க்க முடியாத மோடி!
1997-ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பிஜூ ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார் நவீன் பட்நாயக். இதற்கு பின் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நவீன்பட்நாயக் முதல்வரானார்.
இதற்கு பின் நடைபெற்ற அடுத்தடுத்த தேர்தல்களிலும் நவீன் பட்நாயக் தொடர்ந்து வெற்றிபெற்றார் இதேபோல் இன்று வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் இவருக்கு சாதகமாகவே அமைந்து உள்ளது ஆக வது முறையாக முதல்வர் ஆகிறார் நவீன் பட்நாயக்
லோக்சபா தேர்தல் பொறுத்த வரையில் மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 14-ல் பிஜூ ஜனதா தளம் முன்னிலை வகித்து வருகிறது. ஒடிஷாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், பிஜிபி ஆல் அசைக்கவே முடியாத மாபெரும் கட்சியாக ஜொலிக்கிறது நவீன் பட்நாயக் பிஜூ ஜனதா தளம்.