தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகை விருது! சிறந்த தமிழ் படம் எது தெரியுமா?

66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திரைப்படம் எடுப்பதற்கு சிறந்த மாநிலமாக உத்திரகான்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த இந்திப் படமாக ஆயுஷ்மான் குரானா நடித்த அந்தாதூ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன், மலையாள நடிகை சாவித்திரியும் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த தெலுங்குப்படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகா நடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேஷ்க்கும் சிறந்த நடிகை சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இந்தப் படம் சிறந்த ஆடை வடிவமைப்பு விருதும் பெற்றுள்ளது.

தமிழ் பிரிவில் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவான பாரம் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பளர் விருது பஞ்சய் லீலா பன்சாலிக்கு வழங்கப்படுகிறது. இவர் அமைத்த பத்மாவதி திரைப்படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த சண்டைப்படம் விருது கேஜிஎஃப் பெற்றுள்ளது. விருதுகள் பற்றிய முழுமையான பட்டியல் விரைவில் வரும்.