சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பெற்ற காஷ்மீரி சிறுவன்! ஆனால் அது கூட தெரியாத வகையில் வீட்டுச் சிறை! பரிதாப சம்பவம்!

இந்த ஆண்டு தமிழில் தேசிய அவார்டுக்கு போட்டியிடும் தகுதியுள்ள பல படங்கள் வந்திருந்தும் எதுவுமே கண்டு கொள்ளப்படவில்லை.


அதைவிடக் கொடுமை 'ஹமீத்' என்கிற உருதுப் படத்தில் நடித்த எட்டுவயது சிறுவன் தல்ஹா அர்ஷத் ரேஷிக்கு நேரிட்டிருப்பது. ஃபோன் நம்பர் 786 என்கிற நாடகத்தை அஜாஸ் கான் என்பவர் ஹமீத் என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார். கானாமல் போன தந்தை  எங்கே இருக்கிறார் என்று 786 என்கிற எண்ணுக்கு போன் செய்து அல்லாவிடம் கேட்கிறான் ஒரு சிறுவன்.அந்த கால் ஒரு மத்திய ரிசர்வ் படை ஜாவானுக்குப் போகிறது.

அந்த இருவருக்குமான உணர்ச்சிகரமான நட்பின் பின்னணியில் சிறுவனின் தந்தையை தேடுகிறது கதை.முழுக்க முழுக்க காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே எடுக்கப்பட்ட இந்தப் படம் சிறந்த உருதுப் படமாகவும் தேர்ந்தெடுக்கபட்டு இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறுவன் ரேஷி சிறந்த குழந்தை நட்சத்திர விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டு இருக்கிறான்.

அவனுக்கு இந்தச் செய்தி இன்னும் தெரியாது.இதை அவனுக்கு சொல்ல பலவழிகளிலும் முயற்சிப்பதாகவும் ,இயலாமையால் தனது படம் தேசிய விருது வாங்கிய் மகிழ்ச்சியை தன்னால் கொண்டாட முடியவில்லை என்று ஹமீத் படத்தின் இயக்குநர் கான் சோகத்துடன் சொல்கிறார்.