குழந்தைப் பருவத்தில் இருந்தே பல துயரங்களை எல்லாம் அனுபவித்து கடந்து தன்னம்பிக்கையுடன் நடனக் கலையில் சாதனை படைத்துள்ள பெண் நடாஷா, பிபிசி வெளியிட்ட செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
கண்முன்னே தாய் தீயில் கருகினார்! 7 வயதில் இருந்து வன்கொடுமை! சோதனைகளை சாதனையாக்கிய நடாஷா! நெகிழ்ச்சி சம்பவம்!
பன்முகத் தன்மைகொண்ட பெண்களைக் கவுரவிக்கும் விதமாக செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 7 பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது இந்தியர்களுக்கு கிடைத்த பெருமையாகும்.
7 பெண்களில் ஒருவரான நடாஷா நோயல் குழந்தைப் பருவத்தில் பல துயரங்களை அனுபவித்து, அவற்றை எல்லாம் கடந்து யோகா, தன்னம்பிக்கைப் பேச்சு, நடனக் கலைஞர் என வளர்ந்தவர்.
இதுகுறித்து நடாஷா அளித்த பேட்டியில், ‘என் அம்மா என் கண் முன்னே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட காட்சி என் மனதை பாதித்தது. குழந்தை பருவம் என்பதால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் என் மீது நான் குற்றவுணர்ச்சிப் பழியை சுமத்திக்கொண்டேன்’என கூறியிருந்தார்.
தனக்கு 7 வயதிலேயே பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும், 15 வயதுவரை உறவினர்களால் பாலியல் சீண்டல்கள், துயரங்கள் என மொத்த உலகத்தின் மீதுமுள்ள நம்பிக்கையை இழந்து ஒவ்வெவாரு நாளும் நரகம் போல் நகர்த்த வேண்டி இருந்ததாகவும் வேதனை தெரிவித்தார்.
தன்னுடைய 17வது வயதில் நடனத்தின் மீது ஆர்வம் இருந்தது. ஆனாலும் விபத்து ஒன்று நடந்ததால், மூட்டு வலி, தசைப்பிடிப்பு உண்டானது. மருத்துவர்கள் சொல்லையும் மீறி நடனமாடச் சென்ற நடாஷாவுக்கு யோகாவும் தன்னம்பிக்கையை கொடுத்தது.
அவரைச் சார்ந்த பலருக்கும் யோகா நிம்மதியைக் கொடுத்தது. தற்போது நடனக் கலைஞராய் இந்தியருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிபிசி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.