செவ்வாய் கிரகத்தில் 2 வேற்று கிரகவாசிகள்! புகைப்படம் வெளியிட்ட மிரள வைத்த நாசா!

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் 2 ஏலியன்கள் நடமாடுவதாக, நாசா அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.


உலகம் முழுவதுமே ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி பலவிதமான வதந்திகள் உலா வருகின்றன.  இருந்தபோதிலும் இதில் நம்பிக்கை இல்லை என்றே பல விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஏலியன்கள் தொடர்பாக, விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இதன்படி, செவ்வாய் கிரகத்தில் 2 ஏலியன்கள் காணப்படுவதாகக் கூறி, அதற்கான புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் நிரந்தரமாக வசித்து வருவதை இந்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துவதாகவும், நாசா குறிப்பிட்டுள்ளது. இருந்தாலும், நாசா பற்றிய தகவலை ஏலியன் ஆராய்ச்சியாளர் ஸ்காட்சி வாரிங் மறுத்துள்ளார்.

நாசாவின் புகைப்படங்களில் ஏலியன் போலவும், பல்லி போலவும், புழுக்கள் போலவும் பலவிதமான உருவங்கள் தென்படுகின்றன. ஆனால், அவை ஒருவேளை பாறை படிமங்களாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது. ஏலியன்கள் பற்றி உறுதியான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது, என்கிறார். 

நாசாவின் சமீபத்திய புகைப்படத்தில் பதிவாகியுள்ள இந்த 2 ஏலியன்கள் யார் என்பது பற்றி விரிவான ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். அதுவரையிலும் நாம் எதுவும் இதில் நம்புவதற்கு இல்லை...