தங்கம் விலை விறுவிறுவென உயர்ந்துவரும் வேளையில்தான், அத்தனை பேரின் வயிற்றிலும் பால் வார்ப்பது போல் அந்த செய்திவந்து சேர்ந்தது. ஆம், உத்தரப்பிரதேசத்தில் சுமார் 3,000 டன் தங்கத் தாதுக்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது.
மோடியின் தங்கமலை ரகசியம்..! ராமர் இப்போ எங்கே போனார் ஆதித்யநாத்?

உ.பியில் தங்கம் இருப்பதாக, அந்த மாநிலத்தின் சுரங்கத் துறைதான் அறிவிப்பு கொடுத்தது. உடனே அந்தத் துறையின் ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு பத்திரிகைக்குப் பேட்டிகொடுத்தார்கள். வட இந்தியத் தொலைக்காட்சிகளில் தங்கப் பாளங்களின் காட்சிகளோ, தங்கத் தாதுவின் காட்சிகளோ காட்டப்படாமல் யோகி ஆதித்யநாத் புகழ் பரந்தது.
ராமருக்கு கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட காரணத்தால், இது ராமரே கொண்டுவந்து கொடுத்த பிரசாதம் என்ற ரேஞ்சுக்கு தகவல்கள் பரப்பப்பட்டன. இனி, இந்தியாவில் தங்க விலை குறைந்துபோகும். உலகத்திலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள நாடு என்ற பெயர் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்றெல்லாம் பேசப்பட்டன.
ஆனால், அத்தனையும் சட்டென்று இல்லாமல் போனது. அங்கே இருக்கும் தங்கத்தை வெட்டி எடுத்தால் 10 கிலோகூட தேறாது என்று மீண்டும் அறிக்கை வெளியாகிவிட்டது. ஏன் இப்படி திடீரென தங்கமலை ரகசியம் வெளியானது என்பதுதான் ஆச்சர்யம்.
இதற்கு பின்னே இருந்தது யோகி ஆதித்யநாத் அல்லது மோடியாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் நேரத்தில், எப்படி அதற்குள் பல்டி அடித்தார்கள். இதற்கு காரணம் என்ன? அள்ளியள்ளிக்கொடுத்த ராமர் திடீரென அத்தனை தங்கத்தையும் எங்கே கொண்டுபோனார்.
சொல்லுங்கப்பா... சொல்லுங்க.