பிரதமர் மோடி தடுக்கி கீழே விழுந்த படிக்கட்டை இடித்து தள்ளுங்கள்! மாநில அரசு அதிரடி தடாலடி உத்தரவு!

பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து சீரமைக்க இருப்பதாக உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.


உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் நடைபெற்ற கங்கை நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாதுகாவலர்களுடன் மோடி படிக்கட்டில் ஏறிச் சென்றபோது திடீரென தடுக்கி தவறுதலாக கீழே விழுந்தார். 

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. படிக்கட்டு உரிய முறையில் கட்டப்படவில்லை. இடையில் இருக்கும் ஒரு சில படிக்கட்டுகள் சரியான அளவில் இல்லை. இதனால் அவர் தடுமாறி இருக்கிறார் என கூறப்பட்டன. 

இதனை ஏற்றுக்கொண்ட உத்திரப்பிரதேச அரசு இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க உரிய படிக்கட்டை இடித்து சரியான அளவில் கட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.