சீனாவிடம் இருந்து இலங்கையை மீட்ட நரேந்திர மோடி! சூப்பர் மூவ்!

கோத்தபய பதவி ஏற்றதும் இனி சீனாவின் கை ஓங்கிவிடும் என்றுதான் பேசப்பட்டது. ஆனால், அவருக்கு இந்தியா மனதார அழைப்பு விடுத்தது.


இதன் விளைவாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சீனாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது இலங்கை. தென்னிலங்கையில் ஹம்பந்தோட்டா எனும் இடத்தில் சீனா துறைமுகம் கட்டி தன் பொறுப்பில் எடுத்தது அதில் சீன கப்பல்களுடன் சீன ராணுவ கப்பல்களும் நிற்கும், அமெரிக்கா தன் கப்பலோடு அடிக்கடி அங்கு சென்று இதுவும் கப்பல்தான் உள்ளே விடு என தகறாறு எல்லாம் செய்யும்

சீனா அதை மிக நன்றாக பிடித்து வைத்திருந்தது, கடந்த மாதம் கூட ஒரு சில உளவு கப்பலை சீனா இலங்கைக்கு கொடுத்திருந்தது. அதுவும் அப்பக்கம் சுற்றுகின்றது. இந்நிலையில் சீனாவுக்கான ஒப்பந்தம் ரத்து என கொழும்பு அறிவித்திருக்கின்றது, இத்தகவலை கொழும்பு நிதி அமைச்சு அறிவித்துள்ளது

கோத்தபாய டெல்லியில் இருக்கும் பொழுது இந்த அறிவிப்பு வந்திருப்பது சீனாவுக்கு இந்தியா கொடுத்த அடி. இந்த துறைமுகம் மகிந்த காலத்தில் அதாவது இந்தியாவில் காங்கிரஸ் அரசு இருந்தபொழுது சீனாவுக்கு கொடுக்கபட்டது, அதை தடுக்க காங்கிரஸ் அரசு நினைக்கவில்லை

மோடி அரசு அதை செய்து மீட்டிருகின்றது, இலங்கையில் இந்திராவின் நிலைப்பாட்டை மன்மோகன் சிங் எடுக்கவில்லை மோடி செய்திருக்கின்றார். 

ஆக பாட்சா படத்து கல்லூரி காட்சி போல் கெத்தாக வந்தார் கோத்தபாய, மோடி என் பெயர் மோடி எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என சொன்னவுடன் வியர்த்து விறுவிறுத்து "அண்ணே. சீனாவாண்ணே.. இப்போ விரட்டிரலாம்ணே.. அண்ணே அது உங்க நாடுண்ணே.. பூரா உங்களுக்குண்ணே" என சொல்லிகொண்டிருக்கின்றார் கோத்தபய‌

நிச்சயம் மோடி அரசின் மிக சிறந்த ராஜதந்திரம் இது, அப்படி என்ன சொல்லி கோத்தபாயவினை வழிக்கு கொண்டுவந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை,