அமித்ஷா பேத்தியை அள்ளித் தூக்கி கொஞ்சி மகிழ்ந்த மோடி! எங்கனு தெரியுமா?

அகமதாபாத்: மோடி ஓட்டு போட்டதைவிட இன்னைக்கு பெரிய ஹைலைட், அமித்ஷா பேத்தியை தூக்கி வைத்து கொஞ்சியதுதான்! நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.


உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். ஓட்டு போடுவதற்காக காந்தி நகரில் உள்ள தன் வீட்டிற்கு சென்றார். தன் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு ஓட்டு போட ஜீப்பில் கிளம்பினார். வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை...

வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலை பள்ளியில்தான் மோடிக்கு ஓட்டு. அதனால் வாக்கு சாவடிக்கு சென்ற பிரதமரை வரவேற்க ஏராளமான ஆதரவாளர்கள் அங்கே திரண்டு நின்றிருந்தார்கள். அங்கே அமித்ஷாவும் இருந்தார். மோடி வந்திறங்கியதும், அவரை வேற்று அமித்ஷா உள்ளே கூட்டி சென்றார். மோடியும் அமித்ஷாவும் வழக்கம்போல் வாஸ்கோட் அணிந்து ஒரே மாதிரி டிரஸ்ஸிங்கில் இருந்தனர்.

பின்னர் பூத்தில் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் மோடி. அப்போது வெளியே அமித்ஷாவின் பேத்தி பார்த்ததும் மகிழ்ச்சியில் வாரி தூக்கி வைத்து கொண்டார். அமித்ஷா கொஞ்சி கொஞ்சியே ஃபேமஸ் ஆனவள் அந்த குட்டி பேத்தி. இப்போது மோடி குழந்தையை ஒரு கையில் தூக்கி வைத்து கொண்டு, மறுகையில் "வி" என்ற விக்டரி சின்னத்தை காட்டினார்.

(நமக்கு பழக்கதோஷமோ என்னவோ.. பார்க்க இரட்டை இலை போலவே தெரிகிறது) மோடி இடுப்பில் மஞ்சள் கலர் கவுனில் சிரிக்கிறது அந்த கியூட் குழந்தையும்! இதை பார்த்ததும் அங்கிருந்த ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சரி இந்த பேத்தியை ஞாபகம் இருக்கா.. பாஜக தொப்பியை பாட்டி போட்டு விட அதை தூக்கி தூக்கி விசிறியடிச்சதே.. அதே பேத்திதான்!)