அத்தனையும் ஆண்! எதிர்த்து நிற்கும் ஒரே ஒரு பெண்! யார் இந்த இந்திராணி!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் ஒரே பெண் வேட்பாளர் இந்துராணி என்பதால் அனைவரின் பார்வையும் இவர் மீது திரும்பி உள்ளது.


நாங்குநேரியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 46 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அதில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.

பொதுவாக, இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இரு தரப்பிற்க்கு மட்டுமே போட்டி கடுமையாக நிகழும். மேலும் இன்னும் ஒரே வருடத்தில் தமிழகத்தில் பொதுத்தேர்தல் வரும் என்பதால், இதில் பலர் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், தைரியமாக பெண் ஒருவர் வேட்பாளராக நிற்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இந்துராணி ஆவார். எம்பிஏ பட்டதாரியான இவருக்கு 34 வயது ஆகிறது.

இந்துராணியின் தைரியத்திற்காக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.