டேய் அவள் என் பொண்டாட்டிடா? நீ என்ன பண்ற? தட்டிக்கேட்ட கணவனுக்கு மந்திரவாதியால் ஏற்பட்ட பகீர் சம்பவம்! நாமக்கல் பரபரப்பு!

மனைவிக்கு பாலியல் தொல்லை தந்தாக போலிசில் புகார் அளித்த கணவன் மந்திரவாதியால் கொல்லப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது.


நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் கிரு‌‌ஷ்ணன், வசந்தா தம்பதி வசித்து வந்தனர். வசந்தா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களுக்கு மனோஜ், உமா மகேஸ்வரி என்ற பிள்ளைகள் உள்ளனர்.  

இந்நிலையில் பணம் கஷ்டம் இருப்பதாக ராம்ஜெத்மலானி என்ற புனைப் பெயர்கொண்ட மந்திரவாதி ராமச்சந்திரனை அணுகியுள்ளார் கிருஷ்ணன். கல்யாணம் ஆகாத ராமச்சந்திரன் மாந்திரீகம், ஜோதிடம் சொல்லி அங்குள்ள மக்களை ஏமாற்றி வருகிறார். இதையடுத்து ராமச்சந்திரனை நம்பிய கிருஷ்ணன் குடும்பம் வினையை வீட்டுக்கு வரவழைத்துள்ளது.

மாந்திரீகம், பரிகாரம் செய்தால், பணம் கொட்டும் என்று ராமச்சந்திரன் சொல்லி அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து வசந்தாவுக்கு அடிக்க போன் செய்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதை கணவரிடம் கூறினார் வசந்தார். இதற்கிடையே ஒருநாள் திடீரென வீட்டிற்குள் புகுந்து வசந்தா கையை பிடித்து இழுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா, கிருஷ்ணன் வெண்ணந்தூர் போலீசில் புகார் தந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் நேராக கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனை சரமாரியாக குத்தினார். இதையடுத்து வெண்ணந்தூரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.