பள்ளி கழிவறைக்குள் நுழைந்து, உடைகளை கிழித்து ஆபாச வீடியோ! மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

நாமக்கல் அருகே அரசு பள்ளியின் கழிவறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்களது ஆடையை கிழித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், ஆபாசமாக வீடியோ எடுத்து விட்டு தப்பிய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டம் ,  பள்ளிபாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1300க்கும் மேற்பட்டவர்கள் மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாத மிக பாதுகாப்பற்ற  நிலையிலும் தொடர்ந்து  இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில், இன்று மாணவிகள் கழிவறைக்கு சென்றபோது  முகமூடி அணிந்து வந்த  4 மர்ம நபர்கள் கழிவறைக்குள்ளே புகுந்ததாகவும், மாணவிகளின் ஆடைகளை கிழித்து கத்தி முனையில் மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன்  செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினால் பாதிக்கபட்ட மாணவிகள் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரியபடுத்தியதை அடுத்து  அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும்  உறவினர்கள் என  மாணவிகளை பாலியால் ரீதியாக துன்புறுத்திய, மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய கோரியும்,பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களையும் எழுப்பி நூற்றுக்கணக்கானோர்  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பள்ளிக்கூடத்துக்கு சுற்றுசுவர் எழுப்பி தருவதுடன், கண்காணிப்பு கேமரா பொருத்தி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்த பின்னரே போரட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.