நளினி மகள் ஹரித்ரா எங்கே? போனும் நாட் ரீச்சபிள்! தாய் மாமன் வெளியிட்ட ஷாக் தகவல்!

சென்னை: மகள் திருமணத்திற்காக பரோலில் வந்த நளினி, அது நிறைவேறாமலேயே மீண்டும் சிறைக்கு திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் வாடும் நளினி, தனது மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, அண்மையில் பரோலில் வந்தார். ஆனால், லண்டனில் படித்து வரும் ஹரித்ராவின் வளர்ப்பு அத்தையின் உறவினர் இலங்கையில் இறந்துவிட்டார். அதற்காக, அனைவரும் லண்டனில் இருந்து இலங்கைக்குச் சென்றுவிட்டார்களாம்.

ஹரித்ரா படிப்பு விசயத்திற்காக, தனது தோழியின் வீட்டிற்குச் சென்றுவிட, அவரது தொலைபேசி எண் நாட் ரீச்சபிள் ஆகிவிட்டது. துக்கம் நடந்த வீடு என்பதால், அடுத்த 30 நாட்களுக்கு சுப காரியம் எதுவும் செய்ய முடியாது. தனக்கு திருமணம் செய்து வைக்க, தனது அம்மா நளினி பரோலில் வந்திருக்கிறார் என்ற விவரம் கூட ஹரித்ராவிற்கு தெரியாது என, நளினியின் சகோதரர் பாக்கியநாதன் மற்றும் தாய் பத்மா கவலை தெரிவிக்கின்றனர்.  

இப்படியாக, மகள் லண்டனில் நாட் ரீச்சபிள் நிலையில் இருக்க, உறவினர் வீட்டில் துக்க காரியம் நடக்க, வேறு வழியின்றி, எதுவும் செய்ய இயலாமல் நிறைவேறாத ஆசையுடன் நளினி மீண்டும் செப்டம்பர் 15ம் தேதி பரோல் முடிந்து, சிறைக்கு திரும்பினார். மீண்டும் பரோல் கிடைக்க வேண்டும் அல்லது நல்லெண்ண அடிப்படையில் நளினியை விடுவித்தால், தமது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து வாழ ஒரு நல்ல வழி ஏற்படும், என்று நளினியின் சகோதரர் பாக்கியநாதன் கண்ணீர் மல்க வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.