டாக்டர் மகளுக்குக் கல்யாணம்.! நளினிக்கு பரோல்.!யார் இந்த நளினி. புலிகள் அழிவுக்குக் காரணம் நளினியா?

ராஜீன் காந்தி கொலை குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி இன்று பரோலில் வந்திருக்கிறார்.


யார் இந்த நளினி. வெறும் 1000 ரூபாய் சம்பளத்தில் வில்லிவாக்கம் பகுதியில் 1990ல் இருந்தவர் நளினி.  இவர் கைதுசெய்யபடும் பொழுது 3 மாத கர்ப்பமாக இருந்தார். இந்திய காவல்துறையின் மிக மென்மையான போக்கே அவள் மகளை பெற்றெடுத்து இன்று வெளியே வந்திருப்பதற்கு முக்கிய காரணம் எனப்படுகிறது. ராஜிவ் புலனாய்வு குழுவுக்கு நளினி மேல் ஒரு இரக்கம் இருந்தது, ஏனென்றால் அந்த கொலையின் முடிச்சு நளினி மூலமே அவிழ்ந்தது

நளினி வாய்திறந்த பின்பே வழக்கின் விடுதலை புலிகளின் முழு சதியும் வெளிவந்தது. ஒருவகையில் இன்று புலிகள் அழிந்தே போயிருப்பதற்கு நளினிதான் முதல் காரணம். நளினியை மட்டும் கண்டுபிடிக்கவில்லை என்றால் அல்லது அவரும் சயனைடு கடித்திருந்தால் ராஜிவ் கொலைவிசாரணை இப்படி முடிந்திருக்காது. ஆமாம், நளினியும் முருகனும் சயனைடு கடிக்கவில்லை?

நளினி முருகனோடு சாக தயாராகத்தான் இருந்திருக்கின்றாள் ஆனால் வயிற்றில் இருந்த கரு அவளை சாகவிடவில்லை மனதை மாற்றியிருகின்றது. அந்த கருவினை காக்கத்தான் சிறையில் உண்மையினை ஒப்புக் கொண்டாள். அந்த தாய்மை உணர்சித்தான் இந்தியாவுக்கு எதிரான மாபெரும் சதியினை உலகறிய வைத்தது. அந்த வகையில் நளினி பரிதாபமாக பார்க்கப்பட வேண்டியவர்

ராஜிவ் கொலை விசாரணையின்போது 3 மாத கருவாக இருந்த அந்த நளினியின் மகளுக்குத்தான் திருமணம். பரோலில் வந்த நளினியினை ஏற்க யாரும் தயாராக இல்லை என்கிறார்கள். வழக்கம் போல திராவிட கழகமே இடமளித்திருகின்றது, அன்றுமுதல் இன்றுவரை இந்திய எதிர்ப்பாளர்களுக்கு இடமளிப்பது அவர்கள்தான். பத்திரிகைகளுக்குப் பேசக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், நளினியின் பேட்டி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆக, எந்த உண்மையும் இப்போதும் வெளிவராது.

இதனிடையே பரோலில் வெளியே வந்த நளினி நேராக சத்துவாச்சேரியில் உள்ள தமிழ் தேசிய ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு அவருக்காகவே காத்திருந்த அவரது மகள் வாரி அணைத்து வரவேற்றார். பிறகு தனது தாயுடன் செல்பி எடுத்து அவர் அதனை தனது தோழிகளுக்கு பகிர்ந்துள்ளார்.