டோக்கன் விபச்சாரம்! நாகர்கோவிலை கலக்கும் 2 பெண் புரோக்கர்கள்!

நாகர்கோவிலில் காவல்துறையினர் பெண் புரோக்கர் உட்பட இரு பெண்களை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.


நாகர்கோவில் ஆனந்தன் பாலத்திலிருந்து தம்மத்துக்கோணம் செல்லும் வழியில் பல தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக பல ஆடம்பரமான ஹோட்டல்களும் அப்பகுதியில் உள்ளன. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விடுதியொன்றில் பல நாட்களாக விபச்சார தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

அந்த தகவலின் பேரில் போலீசார் அந்த ஹோட்டல் மீது தீவிரமான கண்காணிப்பை செலுத்தினர். இந்நிலையில் அந்த ஹோட்டலுக்கு அடையாளம் தெரியாத பல நபர்கள் வந்து போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் திடீரென சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்களை கையும் களவுமாக பிடித்தனர்.

போலீசார் நுழைவதை பார்த்து அங்கிருந்த சிலர் தப்பியோடினர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் இருவரும் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர்.  அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர் மற்றொருவர் பெங்களூருவை சேர்ந்தவர் ஆவார். நாகர்கோவில் பகுதியில் உள்ள பெண்ணொருவர் அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தங்களை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியதாக போலீசில் அந்த இரு பெண்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரையும் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச்சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் காப்பகத்தில் சேர்த்தனர். மற்றும் தலைமறைவாக உள்ள தனியார் விடுதி உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில் விடுதிக்கு வருவர்களுக்கு ஒரு டோக்கன் கொடுக்கப்படுகிறது. அந்த டோக்கனில் உள்ள அறைக்கு சென்றால் உள்ளே அவர்களுக்கு தேவையான பெண்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரை தேர்வு செய்து உல்லாசம் அனுபவித்துவிட்டு செல்லும் வகையில் இந்த தொழில் நடைபெற்று வந்துள்ளது.