காய்ச்சல்னு போனேன்! இடுப்புல ஊசி போட்டார்! இன்னும் உள்ளேயே தான் இருக்கு..! டாக்டரால் பெண்மணிக்கு நேர்ந்த பரிதாபம்!

நாகை மாவட்டத்தில் காய்ச்சலால் மருத்துவமணைக்கு சென்ற பெண்ணுக்கு இடுப்பில் போடப்பட்ட ஊசி உடைந்து அப்பெண்ணின் உடலுக்குள் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான நாகையில் அமைந்துள்ள சீர்காழியைச் சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட வந்துள்ளார். இந்நிலையில், பார்வதி சீர்காழியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.  

பார்வதியை பரிசோதித்த மருத்துவர், சில மத்திரைகளும், இடுப்பில் ஊசியும் போடுமாரு செவிலியரிடம் கூறியுள்ளார். செவிலியர் பார்வதிக்கு ஊசி போட்டுள்ளார். அப்போது ஊசி உடைந்து பார்வதியின் உடலுக்குள் சிக்கியிருக்கிறது. 

ஊசி போட்டு சில மணி நேரங்கள் ஆனா பின்னர், பார்வதி வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதைப் பற்றி செவிலியரிடம் கேட்டு உள்ளார். ஆனால் செவிலியர் அதுகுறித்து அப்படி எதுவும் இல்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர், சில நாட்களுக்கு பிறகு பார்வதிக்கு வலி அதிகாம ஆயிற்று. இதனை அறிந்த மருத்துவர்கள் சில வீடு தேடி வந்து பார்வதியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது தான் தெரிய வந்துள்ளது, உடைந்து போன ஊசியின் ஒரு பகுதி பார்வதியின் உடலில் சிக்கியிருந்தது தெளிவாக ஸ்கேனில் தெரிந்துள்ளது.

மேலும், ஊசியின் உடைந்த பக்கம், பார்வதியின் உடலில் ஆழத்திற்கு சென்றுவிட்டதாகவும் அந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தினர். ஆனால் பார்வதிக்கு சிதம்பரம் சென்று சிகிச்சைபெறும் அளவிற்கு போதிய வசதி இல்லை வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பார்வதி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். என்னவென்றால், மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் அலட்சியத்தால் தனக்கு இப்படி நிகழ்ந்துள்ளது என்றும், அதனால் எனக்கு சிகிச்சை அளிக்க அரசு தான் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.