என்ன ஒரு எக்ஸ்பிரசன்! என்ன ஒரு குரல் வளம்! டிரெண்டான நாகை சகோதரிகள்!

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் அச்சுப்பிசகாமல் பாடி வெளியிட்ட வீடியோ இணையத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.


நாகப்பட்டினம் மாவட்டம் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளான செல்வகுமார் மற்றும் கொடிமலர் இருவருக்கும் ஸ்ரீமதி, ஸ்ரீ சக்தி எனும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நீண்ட காலமாக பாடல் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கேள்வி ஞானம் மூலம் தொலைக்காட்சி, வானொலி மூலம் பாடல்கள் கேட்டு முறைப்படி எந்த பயிற்சியும் இல்லாமல் அச்சுப்பிசகாமல் பாடினர். அதனை ரெக்கார்ட் செய்த அவரது தந்தை செல்வகுமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ பதிவிட்ட சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு, சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளில் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.