என் கூட படுக்கும் போது தெரியலியா, நான் அந்த ஜாதினு? கைக்குழந்தையுடன் கதறிய மாற்றுத்திறனாளி பெண்! நாகை பரிதாபம்!

காதலித்து ஏமாற்றிய காதலன் வீட்டு வாசலில் அமர்ந்து பெண் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் நாகையில் நடைபெற்றுள்ளது.


நாகை மாவட்டம் திருமருகல் அருகே வீரப்பெருமால்நல்லூர் கிராமத்தை சேர்ந்த தீனா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணும், அய்யப்பன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில் அதற்கு அடையாளமாக கடந்த ஆண்டு தீனா கர்ப்பம் தரித்துள்ளார். 

இதையடுத்து நியாயம் கேட்டு தீனாவின் உறவினர்கள் அய்யப்பன் வீட்டை முற்றுகையிட சாதியை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அய்யப்பன் மீது பாதிக்கப்பட்ட பெண் தீனா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அய்யப்பனுக்கு காவல்துறையில் கொஞ்சம் நெருக்கம் இருப்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தற்போது தீனாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்க மீண்டும் நியாயம் கேட்டு அய்யப்பன் வீட்டிற்கு சென்றார் தீனா. தன்னுடைய குழந்தை முகத்தை பார்த்தும் மனம் மாறாமல் தீனாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் அய்யப்பன். இதை அடுத்து அய்யப்பன் வீட்டு வாசலில் பச்சிளம் குழந்தையுடன் தீனா தர்ணா போராட்டம் நடத்த அவருக்கு ஆதரவாக உறவினர்களும், கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தான் மாற்று சாதி என்பதாலும் மாற்றுத்திறனாளி என்பதாலும் தன்னை அய்யப்பன் திருமணம் செய்ய மறுப்பதாக தீனா குற்றம் சாட்டினார். பிரச்சனை பெரிதாவதை பார்த்த அய்யப்பன் பயந்து போய் தலைமறைவாகி உள்ளார். தகவலறிந்து வந்த காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். காதலிக்கும்போதும், பாலியல் பலாத்காரம் செய்யும்போதும் சாதி தெரியவில்லையா என்று நீங்கள் கேட்கும் கேள்வி காலம் காலமாக கேட்கப்பட்டுதான் வருகிறது !