நடிகர் சங்கத் தேர்தல்! விஷாலுக்கு ஆப்பு வைத்த பாக்கியராஜ்!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக நடிகர் பாக்கியராஜ் களமிறங்கியுள்ளார்.


நடிகர் சங்கத்தில் தற்போது பொறுப்பாளர்களாக இருக்கும் நாசர் மற்றும் விஷால் அணியினரின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. இதனை அடுத்து புதிய தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்டோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் நாசர் மற்றும் தற்போதைய பொதுச்செயலாளர் விஷால் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

கடந்த முறையை போலவே பாண்டவர் அணி என்கிற தலைப்பில் விஷால் தலைமையில் தேர்தலில் களம் காண உள்ளனர். கடந்த முறை விஷால் அணி சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக களம் இறங்கி வெற்றி கண்டது. இந்த நிலையில் மீண்டும் நடைபெறவுள்ள தேர்தலில் விஷாலுக்கு எதிராக ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு டீம் போட்டியிட உள்ளது.

விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிட உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் முன் நிறுத்தப்பட உள்ளார். கடந்த முறை விசாரணைக்கு ஆதரவாக பாக்கியராஜ் வாக்கு சேகரித்த நிலையில் தற்போது விஷால் எதிராகவே அவர் களமிறங்க உள்ளது நாசர் போன்றோருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.