எங்க கிட்டயே காசு கேட்குறியா? டோல்கேட்டை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் தம்பிகள்!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்த நாம் தமிழர் கட்சியினர் ஆத்திரத்தில் சாவடியி கண்ணாடியை உடைத்து விட்டு சென்றுள்ளனர்.


சென்னை தாம்பரம் செங்கல்பட்டு இடையே உள்ளது பரனூர் சுங்கச்சாவடி. பொதுவாகவே சுங்கச்சாவடி என்றாலே பணம் கொடுப்பதற்கு யாருக்குமே விருப்பம் இல்லைதான். கட்டணம் செலுத்தாவிட்டால் கேட் திறக்க மாட்டார்கள் என்பதால் வேறு வழியின்றி செலுத்தி விட்டு செல்கின்றனர்.

ஆனாலும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்காக கட்சி கொடி ஏந்தி நிறைய வாகனங்களில் வரும் தொண்டர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த மறுப்பதும் அதனால் தகராறு ஏற்படுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பரனூர் சுங்கச்சாவடி வழியே பயணம் செய்த நாம் தமிழர் கட்சியினர் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து பிரச்சனை செய்துள்ளனர். பணம் செலுத்தாமல் காருக்கு வழிவிடமாட்டோம் என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூற இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில், காரில் இருந்த ஒருவர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதுடன் அங்கிருந்த கண்ணாடியை உடைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து காரில் அனைவரும் தப்பி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சுங்கச்சாவடி ஊழியர்கள் தந்த புகாரில் அராஜாகத்தில் ஈடுட்டுவிட்டு தப்பிச்சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மோதலால் பரனூர் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் பயணித்தவர்கள், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் என்று கூறப்படுகிறது..