உனக்கு எத்தனை ஆம்பள வேணும்டி..? கள்ளக் காதலியின் அந்தரங்க உறுப்பில் ஆசிட் வீசிய கொடூரம்!

மைசூர்: பெண்ணின் பிறப்புறுப்பில் ஆசிட் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.


கர்நாடகா மாநிலம், ஹாவேரி மாவட்டம், பங்கபுரா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் கலாசடா. 42 வயதான இவர், ஆட்டோ ஓட்டுனர் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக, கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக, அந்த பெண், மஞ்சுநாத்தை புறக்கணித்துள்ளார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாத், அப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.  

இதன்படி, ஹவேரி புறநகர்ப்பகுதியில் உள்ள சித்தனா குடா மலைப்பகுதிக்கு அவரை அழைத்துள்ளார். இதன்படி, அங்கு வந்த பெண்ணிடம், தன்னை புறக்கணிப்பது ஏன் என்று கேள்வி கேட்டிருக்கிறார் மஞ்சுநாத். அதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் இருந்துள்ளார். தன்னை விட்டுவிட்டு வேறு யாருடனோ அந்த பெண் பழக தொடங்கிவிட்டதாக, சந்தேகமடைந்த மஞ்சுநாத், அவருக்கு சரியான பாடம் புகட்ட தீர்மானித்தார்.

உடனடியாக, அந்த பெண்ணின் உடைகளை அவிழ்த்துவிட்டு, அவரது பிறப்புறுப்பின் மீது ஆசிட்டை வீசியுள்ளார். இதில், அவர், அடி வயிறு, தொடை மற்றும் பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் காயம் அடைந்து, வலியால் அலறினார். அக்கம் பக்கத்தில் இருந்த சில விவசாயிகள் உடனடியாக அங்கு வந்து அவரை மீட்டனர். சம்பந்தப்பட்ட நபரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.