அடக் கடவுளே! காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட காதலி! அதிர வைக்கும் காரணம்!

திருமணத்திற்கு மறுத்ததால் வீடியோ வெளியிட்ட காதலி; அவமானத்தில் காதலன் தற்கொலை


மைசூர்: திருமணத்திற்கு மறுத்ததால், காதலன் தொடர்பான உல்லாச வீடியோவை காதலி வெளியிட்டதால், அவர் தற்கொலை செய்துகொண்டார். 

மைசூரில் உள்ள மல்லுபுரா பகுதியை சேர்ந்தவர் கிரீஷ். இவர் மைசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.  இருவரும் தீவிரமாகக் காதலித்துள்ளனர். காதலின் பேரில் இருவரும் அவ்வப்போது, தனிமையில் சந்தித்து உடல் உறவு செய்தும் வந்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம், அந்த இளம்பெண் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கிரீஷ்க்கும் அவரது காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தனது காதலியை திருமணம் செய்ய மாட்டேன் என்று அவர் மறுத்துவிட்டாராம். 

இதனால், விரக்தி அடைந்த காதலி, கிரீஷ் கூட நெருக்கமாக இருக்கும் வீடியோவை ஃபேஸ்புக், உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இவை வைரலாகப் பரவியதை அடுத்து, கிரீஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.  அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தபோதும் சிகிச்சை பலனின்றி கிரீஷ் உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவாகிவிட்ட கிரீஷின் காதலியையும் போலீசார் தேடி வருகின்றனர்.