இளம் பெண் கடத்தல்! மிரட்டல்! பாலியல் தொந்தரவு! கிறிஸ்தவ பிஷப் செய்ற வேலையா இது? பதற வைக்கும் ஆதாரம்!

மைசூரு: கடத்தல், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட புகார்களின் கீழ் மைசூரு பிஷப் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


மைசூருவில் உள்ள கத்தோலிக்க டிஸோசஸ் பிஷப்பாக கே.ஏ.வில்லியம் உள்ளார். இவர் மீது சக பாதிரியார்கள் பாலியல் தொந்தரவு உள்பட பல்வேறு புகார்களை எழுப்பி சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அத்துடன், போலீசிலும் இதுபற்றி புகார் செய்திருந்தனர். குறிப்பாக, பிஷப்பின் கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் பணிபுரியும் பாதிரியார் ஒருவர் உள்ளூர் பெண்ணிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்திருக்கிறார்.

இதுபற்றி புகார் செய்தபோது  பிஷப் வில்லியம் கண்டும் காணாமல் இருந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்கவே, இதன்பேரில் மற்ற கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து வில்லியம் மீது போலீசில் புகார் செய்தனர்.  

புகார்கள் வலுத்ததை தொடர்ந்து இதுபற்றி விசாரணை மேற்கொண்ட மைசூரு போலீசார், தற்போது பிஷப் வில்லியம் மீது கடத்தல், பாலியல் தொந்தரவு தருதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதுபற்றி புகார் செய்துள்ள கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் பேசுகையில், வில்லியம் அரசியல் ரீதியான செல்வாக்கு உள்ளவர் என்பதால், அவர் மீது வழக்குப் பதிய போலீசார் தயங்குகிறார்கள். இதனையும் மீறி எங்கள் தரப்பு நியாயத்தை புரிய வைத்து வழக்குப் பதிய செய்துள்ளோம். திருச்சபை பெயரை கெடுக்கும் அவருக்கு தண்டனை வாங்கி தராமல் விடமாட்டோம், என்று குறிப்பிட்டனர்.