முழு ரெளடியாகவே மாறிய பிரேமலதா! பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆயிரம் ஓட்டுக்கு ஆப்பு

விஜயகாந்த் பிரசாரம் செய்ய வருவார் என்றுதான் தே.மு.தி.க.வை கூட்டுக்கே சேர்த்தார்கள். ஆனால், இப்போது பிரேமலதா மட்டும்தான் ரவுண்டு கட்டி அடிக்கிறார்.


பொள்ளாச்சியில், பாலியல் கொடுமை இருந்தாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கே ஓட்டு போடுங்கள் என்று பிரேமலதா பேசினார். இதைக் கண்டு கொதிப்பாகியிருக்கும் மகளிர் அமைப்புகள் பிரேமலதாவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கின்றன.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிக்க வந்த பிரேமலதா, அவரது புண்ணியத்தால் 5000 வோட்டுகளுக்கு வேட்டு வைத்திருக்கிறார். நடந்தது இதுதான். பொன்னாருக்கு பிரசாரம் செய்வதற்காக குமரி மாவட்டம் வேர்கிளம்பி சாலையில் வாகனத்தை நிறுத்தினார்.

குறுகிய சாலையில் திடீரென வாகனத்தை அவர் நிறுத்தியதால், அவருக்குப் பின்னே ஏராளமான வாகனங்கள் நிற்கத் தொடங்கின. அதனால் அவரது வாகனத்தைக் கொஞ்சம் ஓரம் கட்டி விடுமாறு சொல்லி, ஒருவர் ஹாரன் அடித்தார்.

அம்புட்டுத்தான் பிரேமலதாவுக்கு வந்ததே கோபம். பத்திரிகையாளர்களையே நீ, வா, போ என்று பேசியவர், சாதாரண வாகனவோட்டிகளை சும்மா விடுவாரா... வாடா, போடா என்று டென்ஷனாகிவிட்டார். ஒரு தலைவி பேசும்போது, இப்படித்தான் ஹார்ன் அடித்து தொந்தரவு கொடுப்பீர்களா என்று கொந்தளித்து, போலீஸார் வசமும் புகார் கொடுத்துவிட்டார்.

பிரேமலதாவின் புதிய அவதாரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் மறுபேச்சு பேச முடியாமல் திரும்பியிருக்கிறார்கள். இப்பவே இப்படின்னா, இந்த அம்மாவுக்கு ஏதாச்சும் பதவி கிடைச்சா அம்புட்டுத்தான் அன்று அலறுகிறார்கள்.

ஆக, அந்த ஊரில் இருந்த5 ஆயிரம் ஓட்டுகளும் அப்படியே அண்ணாச்சி வசந்தகுமாருக்கு பார்சல் ஆகியிருக்கிறது. நடந்ததைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடிக்கிறார் பொன்னார். பரிதாபம்தான்.