சென்னையில் திடீரென ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்..! பெண்களும் கூட்டமாக கூட்டம் திரண்டனர்! ஏன் தெரியுமா?

அயோத்தி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்றனர்


பாபர் மசூதி வழக்கில் சட்டத்தின் படி தீர்ப்பளிக்காமல் நம்பிக்கையை முன்னிறுத்தி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் போக்கைக் கண்டித்து 18/11/2019 திங்கள் கிழமை மதியம் 2 மணியளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 

மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் இ.முஹம்மது மாநில பொருளார் அப்துல் ரஹீம், துனை பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மாநில செயலாளர்கள் சித்திக், காஞ்சி இப்ராஹீம், பாரூக், யூசுப் அலி,சையத் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பாபர் மசூதி வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த இஸ்லாமியர்களுக்கு இந்தத் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள் என்று கூறி சட்டத்தையும், நீதியையும் புறந்தள்ளி நம்பிக்கையை மையமாக வைத்து இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

இஸ்லாமிய சமுதாயம் மட்டுமின்றி நல்லிணக்கத்தை விரும்பும் நடுநிலை மக்கள் கூட இந்தத் தீர்ப்பு தவறு என்று விமர்சித்து வருகின்றார்கள். பல அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பினை தவறு என்று விமர்சித்துள்ளார்கள். இந்தத் தீர்ப்பை எந்த நிலையிலும் மக்கள் ஏற்கவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்: 

-உச்சநீதிமன்றம் அளித்திருக்கின்ற தீர்ப்பில் பாபர் மஸ்ஜித் ஒரு சட்டப்பூர்வமான பள்ளிவாசல் தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வழக்கில் ராமர் பிறந்த இடத்தையும் ஒரு சட்டபூர்வமான வாதியாக சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற வாதத்தை சன்னி வக்ஃபு வாரியம் முன் வைத்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

-ராமர்கோவிலை இடித்து விட்டுத்தான் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் மறுத்து விட்டது. ஏற்கனவே இருந்த கட்டடத்தின் தூண்கள், கற்களை கொண்டு தான் பாபர் மஸ்ஜித் எழுப்பப்பட்டது என்ற வாதத்தையும் நீதிமன்றம் மறுத்து விட்டது. -தொல்லியல் அறிக்கையை நீதிமன்றம் புறக்கணித்து விட்டது

-நம்பிக்கை அல்லது தொல்லியல் ஆய்வறிக்கையின் அடிப்படையில் பாபர் மஸ்ஜித் நிலத்தை யாருக்கு சொந்தமானது என்று தீர்ப்பளிக்க கூடாது என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

-வெளிநாட்டு பயணிகளுடைய பயணக் குறிப்புகளை ஆதாரமாக கொள்ள முடியாது என்ற முஸ்லிம் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

-பள்ளி கட்டுவதற்கு முன்பாகவே ராமர் கோவில் இடிக்கப்பட்டது என்பதற்கு 18 ம் நூற்றாண்டிற்கு முன்பு எந்தவிதமான வரலாற்று ஆவணங்களும் இல்லை என்பதை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

-1858 க்கு பிறகு முஸ்லிம்கள் தொழுகை நடத்தாமல் இருந்தார்கள் அல்லது பள்ளிவாசலை கைவிட்டு விட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. 

இத்தனை அம்சங்களையும் ஒப்புக் கொண்ட நீதிமன்றம் பாபர் மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று தான் தீர்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாற்றமாக, எதிர் தரப்பினருக்கு உரியது என்று அது தீர்ப்பளித்துள்ளது..அத்துடன் முஸ்லிம்கள் தங்கள் அனுபவ உரிமையை நீரூபிக்க தவறி விட்டது என்றும் அது தெரிவித்திருக்கின்றது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், முஸ்லிம்கள் தங்களுக்குரிய அனுபவ உரிமையை நிரூபிக்கவில்லை என்று கூறுகின்ற அதே வேளையில் இந்துக்களுக்கு அங்கு வழிபாடு செய்வதற்குரிய தனி உரிமையையோ அல்லது மொத்த நிலத்தின் அனுபவ உரிமையையோ உச்சம் நீதிமன்றம் தனது தீர்ப்பின் எந்த பகுதியிலும் குறிப்பிடவில்லை என்பது தான். அதனால் இதை முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதியாகப் பார்க்கின்றார்கள்

இவ்வளவு பெரிய அநீதி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்க முஸ்லிம்கள் ஒருமனதாக இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற பிம்பம் வலுவாக கட்டமைக்கப்படுகிறது.

அது வரலாற்றில் தவறாக பதிவாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றது.

பாபரி மஸ்ஜித் தொடர்பான இவ்வழக்கில், முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் கமால் ஃபாரூக்கி அவர்கள் குறிப்பிடுவது போல் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட 63 ஏக்கர் நிலமாகும்.ஆனால் உச்சநீதிமன்றம் முஸ்லிம்களுக்கு வழங்க சொல்வதோ 5 ஏக்கர் நிலமாகும் என்ற உண்மையை தமிழ்நாடு தவ்ஹீது இங்கு வலுவாக பதிய வைக்கின்றது.

அதனால் முஸ்லிம்கள் மத்திய அரசாங்கம் வழங்குகின்ற இந்த 5 ஏக்கர் நிலத்தை பெறவேண்டாம் என்று சம்பந்தமட்ட முஸ்லிம் வாதிகளைக் கேட்டுக் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது. 

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியதை போன்று எளியவனின் சொத்தை வலியவன் பறிப்பதற்கு இத்தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இந்த கண்ணோட்டத்தின்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அணுகும் போது இது முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய தனிப்பட்ட பாதிப்பல்ல.ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பாகும்.இதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் உணரவேண்டும்.

பாபர் மசூதி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருக்கிறது இந்த மணி இருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் தன்னுடைய கணடன உரையில் தெரிவித்தார்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் பயாஸ் நன்றி கூறினார்.

சென்னை மாவட்ட நிர்வாகிகள் சாகுல்,ஹபீப்,பிரோஸ்கான்,ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து தங்களின் கைகளில் பாதாகைகளை ஏந்தியிருந்தனர். தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில் அங்கு கூடியிருயிருந்த மக்கள் கண்டன கோசங்களை முழங்கினார்கள்.

இந்தச் செய்தியை தங்களின் பத்திரிகை /காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் இடம்பெறச் செய்து ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.