வாழ்த்து சொன்னா மட்டும் போதாது, அயோத்தீயில் ஆதரவா நிற்கணும்! ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமியர்கள்!

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்னாளான மிலாது நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில், நபிகள் நாயகம் அவர்கள், தன் தாயின் கருவறையிலிருந்த போதே தந்தையை இழந்தவர். பிறகு தனது ஆறு வயதில் தாயாரை இழந்தவர். இளம் வயதிலேயே துயரச் சூழலில் வளர்ந்தாலும், பொய் பேசாமல், தனது வாக்குறுதிகளில் இருந்து துளியும் தவறாமல் தனித்துவம் மிக்கவராகத் திகழ்ந்த தியாக சீலராவார்.

ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் விளங்கிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள், “கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகியவற்றை அறவே துறந்து, உயரிய சிந்தனைகளை உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு அர்ப்பணித்தவர். “ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர். 

அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவைகள் மட்டுமின்றி, அவை பொன்னேபோல் போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் ஆகும் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய இஸ்லாம் அமைப்பினர், ‘’வாழ்த்து கூறுவதால் எங்களுக்கு எதுவும் நிறைந்துவிடப் போவதில்லை. அயோத்தி தீர்ப்பு வந்தபோது இஸ்லாம் அமைப்பினர் அனைவருமே அதிர்ந்து போனோம். தீர்ப்பை மதிக்கிறோம், ஆனால் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னோம். அதன்பின்னரும் அயோத்தி தீர்ப்புக்கு ஆதரவாக ஸ்டாலின் அறிக்கை விடுத்ததைக் கண்டு அதிர்ந்துவிட்டோம்.

திருமாவேலனும், சீமானும்தான் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினார்கள் என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள். ஸ்டாலின் நோட் திஸ் பாயிண்ட்.